சென்னை ஏர்போர்ட்டில் சிக்கினார் | Dinamalar video, Videos, News Videos & More – Dinamalar

சென்னைச் செய்திகள்

ஷார்ஜாவில் இருந்து கல்ப் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். வெளிநாட்டு பெண் ஒருவர், சிகிச்சை பெற சென்னை வந்ததாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். பிறகு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். போதை பொருள் அடங்கிய 90 கேப்சூல்களை விழுங்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இனிமா கொடுத்து 90 கேப்சூல்களை வெளியில் எடுத்தனர். அதில் 902 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 6.31 கோடி. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. எந்த கும்பலுக்காக போதை மருந்தை கடத்தி வந்தார் என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiOWh0dHBzOi8vbS5kaW5hbWFsYXIuY29tL3ZpZGVvX2RldGFpbC5waHA_aWQ9MjM2Mzc3JmNhdD0zMtIBAA?oc=5