நீலாங்கரை பீச்சில் தனிமையில் இருந்த காதல் ஜோடி.. போன் பேவில் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்.. – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை கடற்கரையில் இருள் சூழ்ந்த பகுதியில் தனிமையில் இருந்த காதல் ஜோடியிடம் மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் போன் பேவில் ரூ.40,000 கொள்ளயடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 25 வயதான இளைஞர் நேற்று முன்தினம் சுமார் 8 மணியளவில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள கடற்கரையில் தனது காதலியுடன் இருள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்துள்ளார்.

இருவர் மட்டும் இருள் சூழ்ந்த இடத்தில் இருந்ததை கவனித்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த கைப்பையை ஆராய்ந்து உள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

கை பையில் பணம் எதுவும் இல்லாததால் அவர்களது செல்போனை பிடுங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனையை பார்த்துள்ளனர். அதில் பணம் இருந்ததை கண்ட அவர்கள், ரூ. 40,000 அவர்களது போன் பேவில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு 8 மணிக்கு மேல் காதலர்கள் இருள் சூழ்ந்த இடத்தில் தனிமையில் அமர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தனிமையில் இருக்கும் காதலர்கள்களிடம் இதுபோன்று கத்தி முனையில் பணம் பறிக்கும் செயல் அதிகளவில் இப்பகுதியில் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட முகமது உசேன் இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களின் வங்கி கணக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் நீலாங்கரை போலீசார் தனிப்படை அமைத்து காதலர்களிடம் ஆன்லைனில் கத்தி முனையில் பணம் பறித்த மூன்று நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : வினோத் கண்ணன்

Published by:Siddharthan Ashokan

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL2NvdXBsZS10aHJlYXRlbmVkLWF0LWtuaWZlLXBvaW50LWFuZC1yb2JiZWQtNDAtdGhvdXNhbmQtcnVwZWVzLWluLWNoZW5uYWktZWNyLWJlYWNoLTg1NjkxMy5odG1s0gGJAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL2NvdXBsZS10aHJlYXRlbmVkLWF0LWtuaWZlLXBvaW50LWFuZC1yb2JiZWQtNDAtdGhvdXNhbmQtcnVwZWVzLWluLWNoZW5uYWktZWNyLWJlYWNoLTg1NjkxMy5odG1s?oc=5