சென்னை அடையாற்றில் மூழ்கிய 14 வயது சிறுவன் – விடிய விடிய தேடியும் கிடைக்காத சோகம் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சைதாப்பேட்டையை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் – வனிதா தம்பதியின் 14 வயது மகன் சாமுவேல், தனது நண்பர்களுடன் அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக, சாமுவேல் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர், ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இரவு நேரம் என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் சார்பில், ட்ரோன் கேமரா மூலம் சிறுவனை தேடும் நடைபெறுகிறது.

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும், கீழ் பகுதியில் சேறும், சகதியாக இருப்பதாலும் சிறுவனை தேட சிரமமாக இருப்பதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvYS0xNC15ZWFyLW9sZC1ib3ktd2hvLWRyb3duZWQtaW4tY2hlbm5haXMtYWR5YXItYS10cmFnZWR5LXRoYXQtY291bGQtbm90LWJlLWZvdW5kLTE1NjI4MNIBggFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy9hLTE0LXllYXItb2xkLWJveS13aG8tZHJvd25lZC1pbi1jaGVubmFpcy1hZHlhci1hLXRyYWdlZHktdGhhdC1jb3VsZC1ub3QtYmUtZm91bmQtMTU2Mjgw?oc=5