முதியவர்களே.. 21ம் தேதி முதல் இலவசமாக பயணிக்கலாம் – போக்குவரத்து அறிவித்த குட்நியூஸ்..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகரப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்கும் பணிகள் வரும் 21ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

“தமிழ்நாட்டில் பால், நெய், வெண்ணெய் விலை கம்மி தான்” – விலை உயர்வு குறித்து அமைச்சர் நாசர் விளக்கம்

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் என 40 இடங்களில் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். பிப்ரவரி 2ம் தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Siddharthan Ashokan

First published:

Tags: Bus, Govt Bus, Month bus pass

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvZnJlZS1idXMtcGFzcy10b2tlbi1mb3Itc2VuaW9yLWNpdGl6ZW4tdG8tYmUtaXNzdWVkLWZyb20tZGVjZW1iZXItMjEtODU3NjA3Lmh0bWzSAXpodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9mcmVlLWJ1cy1wYXNzLXRva2VuLWZvci1zZW5pb3ItY2l0aXplbi10by1iZS1pc3N1ZWQtZnJvbS1kZWNlbWJlci0yMS04NTc2MDcuaHRtbA?oc=5