”வெற்றிக்கான பூவாச்சே..” சென்னையில் வாகை மலர் குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் வரி வசூல் திருப்திகரமாக இருந்தாலும் புதிதாக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காதது வருத்தம் அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய வருவாய் குடியிருப்பு வளாகத்தில், வருமான வரித்துறை ஆ மற்றும் இ பிரிவு அலுவலர்கள், மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

சுமார் 560 கோடி மதிப்பீட்டில் ” நந்தவனம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு, குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்ற பூக்களின் பெயர்களான “கொன்றை”, “காந்தள்”, “காஞ்சி”, “வாகை”, “அனிச்சம்”, “செண்பகம்”, “அகில்”, “மௌவல்”, “தாமரை” மற்றும் “வேங்கை” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  டெல்லியில் மீட்டிங்.. ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் கமல்ஹாசன்!

தொடர்ந்து “பைம்பொழில்” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள நுண் வனத்தையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற அமைச்சருக்கு மல்லிகை செடி, வாகை மலர் செண்டு, வள்ளுவர் சிலை உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறை அலுவலர்கள் நீங்கள். நாட்டிற்கு சேவையாற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை.

பசுமையான சூழலில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது சிறப்பு. இதே போல் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். வாகை மலர் எனக்கு அளித்தது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. வாகை மலர் சூடி ஒருவர் வந்தால் அவர் வெற்றி பெற்று திரும்புகிறார் என பொருள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மலரை தேடி கண்டறிந்து எனக்காக கொடுத்ததற்கு நன்றி.

இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி உழைத்து வருகிறார். அதற்காக நானும் என்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் வரி வசூல் திருப்திகரமாக இருந்தாலும், புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். எனவே, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMilAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy90YW1pbC1uYWR1L2ZpbmFuY2UtbWluaXN0ZXItbmlybWFsYS1zaXRoYXJhbWFuLXJlcXVlc3RzLXRvLWluY3JlYXNlLXRoZS1udW1iZXItb2YtdGF4LXBheWVycy1pbi10YW1pbC1uYWR1LTg1Nzg4NC5odG1s0gGYAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy90YW1pbC1uYWR1L2ZpbmFuY2UtbWluaXN0ZXItbmlybWFsYS1zaXRoYXJhbWFuLXJlcXVlc3RzLXRvLWluY3JlYXNlLXRoZS1udW1iZXItb2YtdGF4LXBheWVycy1pbi10YW1pbC1uYWR1LTg1Nzg4NC5odG1s?oc=5