மது போதை ட்ரைவர்.. நொறுங்கிய கார்.. பலியான பெண் எஞ்சினியர்.. சோகத்தில் முடிந்த லாங் ட்ரைவ் ..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் ரைடு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ஐடி பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கிருத்திகா(26) ஸ்ரீதர்(29) அபிஷா(26), பங்கஜ்(18) ஆகிய நான்கு பேரும் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் காரில் லாங் டிரைவ் சென்று கொண்டிருந்தனர்.

சென்னை கொரட்டூரை சேர்ந்த ஸ்ரீதர்(29) காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி சினிமா காட்சியில் வருவதை போல கார் பல பல்ட்டி அடித்து விபத்துக்குள்ளானதில் அப்பளம் நொறுங்கியுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

விபத்துக்குள்ளானதும் காரின் பின் கதவு திறந்து பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா சாலையில் விழுந்து பின்னர் சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிருத்திகாவை மீட்டு பரிசோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. காரின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக் ஓபன் ஆனதால் ஸ்ரீதர், பங்கஜ் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அபிஷா காரின் உள்ளே சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்தார்.

விபத்துக்குள்ளான 3 பேரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  விசாரணையில், காரை ஓட்டி வந்த ஸ்ரீதர் உடன் பயணித்த மூவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுக்குநூறாக நொறுங்கிய காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ப. வினோத்கண்ணன், இசிஆர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvaXQtZW1wbG95ZWUtZ2lybC1kaWVkLWluLWNoZW5uYWktYWNjaWRlbnQtd2hvLXJpZGUtd2l0aC1mcmVpbmRzLTg1NzkwNi5odG1s0gF1aHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2NoZW5uYWkvaXQtZW1wbG95ZWUtZ2lybC1kaWVkLWluLWNoZW5uYWktYWNjaWRlbnQtd2hvLXJpZGUtd2l0aC1mcmVpbmRzLTg1NzkwNi5odG1s?oc=5