அட.. சென்னை மாநகராட்சியின் நவீன குப்பை அள்ளும் இயந்திரம் – தினமணி

சென்னைச் செய்திகள்

அட.. சென்னை மாநகராட்சியின் நவீன குப்பை அள்ளும் இயந்திரம்

குப்பை அள்ளும் கிரேன் போன்ற அமைப்பு, குப்பை லாரிகளுடன் மிக அட்டகாசமாக இணைக்கப்பட்டு, குப்பைகளை அள்ளும் பணிகள் கனக்கச்சிதமாக செய்து முடிக்கப்படுகின்றன.

நவீன இயந்திரங்கள் மற்றும் வசதிகளை சென்னை மாநகராட்சி மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, சென்னை மாநகரத்தை குப்பையில்லாத நகரமாக வைத்திருக்க அனைத்து வகையிலும் முயன்று வருகிறது.

இந்த நிலையில், குப்பைகளை அகற்றும் பணியில் ஒரு புதிய முன்னோடித் திட்டமாக, குப்பை லாரிகளுடன் ஒரு கிரேன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கிரேன் மூலம் மிகப்பெரிய மரக்குப்பைகள், கழிவுகள் அனைத்தும் ஒரு நொடியில் அள்ளி லாரியில் போடப்பட்டு, சாலை சுத்தப்படுத்தும் பணி செவ்வனே நடந்து முடியும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விடியோவுடன் தகவல் வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifmh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMi9kZWMvMjAvYWgtY2hlbm5haS1jb3Jwb3JhdGlvbnMtZ2FyYmFnZS1tYWNoaW5lLTM5NzAxODUuaHRtbNIBe2h0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvZGVjLzIwL2FoLWNoZW5uYWktY29ycG9yYXRpb25zLWdhcmJhZ2UtbWFjaGluZS0zOTcwMTg1LmFtcA?oc=5