அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடி ஒன்றும் கட்டுமான நிறுவனங்களின் சொத்து இல்லை.. சென்னை உயர் நீதிமன்றம்! – BhoomiToday

சென்னைச் செய்திகள்

அப்பார்ட்மெண்ட் கட்டுமானம் நிறுவனங்கள் பல, அவர்கள் கட்டும் கட்டிடத்தின் மேல் கூடுதலாக செல்போன் நிறுவனங்களின் டவர்களை அமைத்து அதன் மூலம் வருமானத்தை அவர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.

இதனை எதித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், அப்பார்ட்மெண்ட்கள் அதில் உள்ள வீடுகளை வாங்கியவர்களின் அனைவருக்குமான சொத்து.

அதில் கட்டுமானம் நிறுவனங்கள் பல எந்த முன் அனுமதியும் இல்லாமல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுகிறன என முறையிடப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் அப்பார்மெண்ட்கள் அதில் உள்ள வீடுகளை வாங்கியவர்களின் அனைவருக்குமான சொத்து. அது ஒன்றும் கட்டுமான நிறுவனங்களின் சொத்து இல்லை.

அதனை கட்டுமான நிறுவனங்கள் எந்த வணிக பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய கட்டுமான நிறுவனத்துக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVWh0dHBzOi8vd3d3LmJob29taXRvZGF5LmNvbS9hcHBhcnRtZW50LWlzLW5vdC1hLXByb21vdGVycy1wcm9wZXJ0eS1tYWRyYXMtaGlnaC1jb3VydC_SAVVodHRwczovL3d3dy5iaG9vbWl0b2RheS5jb20vYXBwYXJ0bWVudC1pcy1ub3QtYS1wcm9tb3RlcnMtcHJvcGVydHktbWFkcmFzLWhpZ2gtY291cnQv?oc=5