சென்னை: திருடச் சென்ற இடத்தில் நடந்த கொலை – இன்ஜினீயர்கள் சிக்கியது எப்படி?! – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்த நிலையில் ஷாகின் ஷா காதரை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேள்விபட்ட அவனின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக வினோத், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர் மகேந்திரன் நேரில் சென்று விசாரித்தார். ஷாகின் ஷா காதரின் மரணம் குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் கிறிஸ்டி ஜெயசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ-க்கள் வேணுகோபால், முருகேசன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் 8 பேர் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது ஷாகின் ஷா காதரையும் வினோத்தையும் தாக்கியது தாம்பரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், ஜெயராம், விருதுநகரைச் சேர்ந்த நம்பிராஜ், திருவள்ளூர் பாலசுப்பிரமணியன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோஜ், கேரளாவைச் சேர்ந்த அஜித் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் எனத் தெரியவந்தது. இதில் சிவபிரகாசத்தை தவிர மற்றவர்கள் இன்ஜினீயர்களாக பணியாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களைப் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உயிரிழந்த ஷாகின் ஷா காதர் மீது ஏற்கெனவே கிண்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUveW91dGgtbXVyZGVyZWQtYW5kLTgtZW5naW5lZXJzLWFycmVzdGVkLWluLWNoZW5uYWnSAV9odHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS95b3V0aC1tdXJkZXJlZC1hbmQtOC1lbmdpbmVlcnMtYXJyZXN0ZWQtaW4tY2hlbm5haQ?oc=5