சென்னை: பெண் கொலை; பல மாதங்களுக்குப் செல்போன் சிக்னலால் துப்பு துலக்கிய வழக்கு! – இளைஞர் கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து லோகநாதனிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவத்தன்று லோகநாதன் மதுபோதையில் தன்னுடைய வீட்டிற்கு கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதி வழியாகச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் எஸ்தர், தனியாக நின்று பூ பறித்துக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த லோகநாதன், எஸ்தரை மிரட்டி அவரின் ஹேண்ட் பேக்கைப் பறித்திருக்கிறார். அப்போது எஸ்தருக்கும் லோகநாதனுக்கும் இடையே கடும் போராட்டம் நடத்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், எஸ்தரைக் கீழே தள்ளி அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் எஸ்தர் உயிரிழந்தார்.

போதையிலிருந்த லோகநாதன், காட்டுப்பகுதியில் எஸ்தரின் சடலத்தை விட்டுவிட்டு அவரின் செல்போன், ஹேண்ட் பேக்கிலிருந்த 700 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். நீண்ட நாள்கள் கழித்தப்பிறகே எஸ்தர் கொலைசெய்யப்பட்ட தகவல் லோகநாதனுக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து எஸ்தரின் செல்போனை லோகநாதன், குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்திலும் மது அருந்தியிருக்கிறார். செல்போன் மூலம் இந்தக் கொலையை துப்பு துலக்கி லோகநாதனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWGh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvY2hlbm5haS1wb2xpY2UtYXJyZXN0ZWQtYS15b3VuZ3N0ZXItd2hvLWtpbGxzLWEtd29tYW7SAWJodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9jaGVubmFpLXBvbGljZS1hcnJlc3RlZC1hLXlvdW5nc3Rlci13aG8ta2lsbHMtYS13b21hbg?oc=5