மின்சார ரயில் சேவையில் என்ன மாற்றம்? தெற்கு ரயில்வே அறிவிப்பு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

தெற்கு ரயில்வே சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது:

“சென்னை மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணி காரணமாக, கீழ்க்கண்ட ரயிலின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம்-சென்னை கடற்கரை பாதையில் செல்லும் மின்சார ரயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

இரவு 9.35, 10.45 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம்-கடற்கரை பாதையில் இயங்கும் மின்சார ரயில்கள் வருகிற 23, 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம்-கடற்கரை பாதையில் இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் 24-ந்தேதி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

இரவு 9.30, 10 மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை-தாம்பரம் இடையே செல்லும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

இரவு 11.20, 11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை-தாம்பரம் பாதையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது என்று அறிவிப்பில் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidGh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NoYW5nZS1pbi1lbGVjdHJpYy10cmFpbnMtdGltaW5nLWJldHdlZW4tY2hlbm5haS1iZWFjaC10by10YW1iYXJhbS01NjIyMTUv0gF5aHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUvY2hhbmdlLWluLWVsZWN0cmljLXRyYWlucy10aW1pbmctYmV0d2Vlbi1jaGVubmFpLWJlYWNoLXRvLXRhbWJhcmFtLTU2MjIxNS9saXRlLw?oc=5