6 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு – வெப்துனியா

சென்னைச் செய்திகள்

இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் மற்றும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 

 

அந்த வகையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் டிசம்பர் 23-ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

 

எனவே மேற்கண்ட 6 மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 

Edited by Mahendran

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vdGFtaWwud2ViZHVuaWEuY29tL2FydGljbGUvcmVnaW9uYWwtdGFtaWwtbmV3cy9oZWF2eS1yYWluLWluLXNpeC1kaXN0cmljdHMtb24tZGVjLTIzLTEyMjEyMTkwMDAzN18xLmh0bWzSAQA?oc=5