சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHA6Ly93d3cuZGluYWthcmFuLmNvbS9OZXdzX0RldGFpbC5hc3A_TmlkPTgyNDI1N9IBNmh0dHBzOi8vbS5kaW5ha2FyYW4uY29tL2FydGljbGUvTmV3c19EZXRhaWwvODI0MjU3L2FtcA?oc=5