சென்னையில் ரெயில் முன் பாய்ந்து பெண் வழக்கறிஞர் தற்கொலை…! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர் ரெயில்வே போலீசார் உதவியுடன் உயிரிழந்த பெண் வழக்கறிஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMic2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS93b21hbi1sYXd5ZXItY29tbWl0cy1zdWljaWRlLWJ5LWp1bXBpbmctaW4tZnJvbnQtb2YtdHJhaW4taW4tY2hlbm5haS04NjIzMTjSAXdodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL3dvbWFuLWxhd3llci1jb21taXRzLXN1aWNpZGUtYnktanVtcGluZy1pbi1mcm9udC1vZi10cmFpbi1pbi1jaGVubmFpLTg2MjMxOA?oc=5