சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

வங்ககடலில் நிலை கொண்ட தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் 25ந்தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தெற்கு வங்க கடலில் மத்திய பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதனால் வருகிற 25ம் தேதி தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல், தென்மேற்கு வங்ககடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMieWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtbG93LW92ZXItYmF5LW9mLWJlbmdhbC10by1zdHJlbmd0aGVuLWludG8tZGVwcmVzc2lvbi1pbi00OC1ob3Vycy01NTEzMzjSAX1odHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vYW1wL25ld3Mvc3RhdGUvdGFtaWwtbmV3cy1sb3ctb3Zlci1iYXktb2YtYmVuZ2FsLXRvLXN0cmVuZ3RoZW4taW50by1kZXByZXNzaW9uLWluLTQ4LWhvdXJzLTU1MTMzOA?oc=5