சென்னை: பட்டதாரி பெண் தற்கொலை; வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை – என்ன நடந்தது? – Vikatan

சென்னைச் செய்திகள்

பியூலா உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், அரசுப் பள்ளிக்குச் சென்று அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியை சௌபாக்கியத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியை சௌபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூலாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதனால் போலீஸார் அங்கு சென்று ஆசிரியை சௌபாக்கியத்தை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பியூலாவின் இந்த விபரீத முடிவுக்கு ஆசிரியை சௌபாக்கியம்தான் காரணம் எனத் தெரியவந்தது. அதற்கு ஆதாரமாக பியூலா தொடர்பாக சமூக வலைதளத்தில் சில தகவல்களை ஆசிரியை செளபாக்கியம் பதிவுசெய்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியை சௌபாக்கியத்தை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியை செளபாக்கியம்

இது குறித்து போலீஸார் பேசுகையில், “பட்டதாரி பெண் பியூலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பியூலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்தோம். விசாரணையில் பியூலாவுக்கும் ஆசிரியை சௌபாக்கியத்துக்கும் இடையே நடந்த சண்டை குறித்த தகவல்கள் தெரியவந்தது. இதற்கிடையில் ஆசிரியை செளபாக்கியம், பியூலாவின் பெயரைக் குறிப்பிடாமல் சில விமர்சனங்களை தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். அது தொடர்பாக சௌபாக்கியத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியை செளபாக்கியம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvbGFkeS1jb21taXRzLXN1aWNpZGUtYW5kLXNjaG9vbC10ZWFjaGVyLWFycmVzdGVkLWluLWNoZW5uYWnSAWhodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9sYWR5LWNvbW1pdHMtc3VpY2lkZS1hbmQtc2Nob29sLXRlYWNoZXItYXJyZXN0ZWQtaW4tY2hlbm5haQ?oc=5