டிச. 28ல் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயா் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. நடப்பு டிசம்பர் மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுவதாக மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும் இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ளவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது. 

இதையும் படிக்க | சமூக முன்னேற்ற குறியீடு: வாய்ப்புகளில் தமிழ்நாடு முதலிடம்

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiV2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9kZWMvMjEvY2hlbm5haS1jb3Jwb3JhdGlvbi1tZWV0aW5nLTM5NzA3NzkuaHRtbNIBVGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzIxL2NoZW5uYWktY29ycG9yYXRpb24tbWVldGluZy0zOTcwNzc5LmFtcA?oc=5