ரயில் முன் பாய்ந்த பெண் வழக்கறிஞர்.. சென்னை பூங்கா நகரில் அதிர்ச்சி சம்பவம் – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமாவதி, வழக்கறிஞரான இவர், இன்று காலை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட பயணிகள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiemh0dHBzOi8vd3d3LnB1dGhpeWF0aGFsYWltdXJhaS5jb20vbmV3c3ZpZXcvMTUyNzQ1L0NoZW5uYWktQS13b21hbi1sYXd5ZXItY29tbWl0dGVkLXN1aWNpZGUtYnktanVtcGluZy1pbi1mcm9udC1vZi1hLXRyYWlu0gF9aHR0cHM6Ly93d3cucHV0aGl5YXRoYWxhaW11cmFpLmNvbS9hbXAvYXJ0aWNsZS8xNTI3NDUvQ2hlbm5haS1BLXdvbWFuLWxhd3llci1jb21taXR0ZWQtc3VpY2lkZS1ieS1qdW1waW5nLWluLWZyb250LW9mLWEtdHJhaW4?oc=5