ரூ.3.63 கோடி நிதி திரட்டிய சென்னை ஐஐடி: மின்வாகன சார்ஜர் நிறுவனம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2019-ம் ஆண்டு பிளக்ஸ்மார்ட் என்னும் மின் வாகனங்களுக்கான சார்ஜர் தயாரிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனம் சென்னை ஐஐடியில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 2, 3, 4 சக்கர மின் வாகனங்களுக்கான சார்ஜரை தயாரித்து வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தது.

மேலும் நிறுவன வளர்ச்சிக்காகத் தொடர்ந்து நிதி திரட்டி வந்த நிலையில், எஸ்கேசிஎல், விசி ப்ளூ ஹில் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களும், சிவதாஸ் ராகவா போன்ற தொழிலதிபர்களும் பிளக்ஸ்மார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு ரூ.3.63 கோடி அளவுக்கு நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தத் தொகையை நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTE3NDM3LWlpdC1jaGVubmFpLXJhaXNlZC1mdW5kcy1vZi1ycy0zLTYzLWNyb3JlLmh0bWzSAQA?oc=5