இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஆள்சேர்ப்பு முகாம்: சென்னையில் நாளை நடக்கிறது – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், நாளை (டிச.23) வங்கி முகவர்களை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. இதில் தேர்வு செய்யப்படும் முகவர்கள், வங்கியின் பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கலாம். மேலும், கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் 30 முதல் 40 சதவீதம் கமிஷன் முகவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த சிறப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் அளவுபுகைப்படம் 2 ஆகியவற்றுடன் சென்னை அண்ணா சாலையில்உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiRmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9jYXJlZXJzLzkxNzk1My1pbmRpYS1wb3N0LXBheW1lbnRzLmh0bWzSAQA?oc=5