சென்னையில் நள்ளிரவில் கடும் பனிப்பொழிவு – புகை சூழ்ந்தது போல் காட்சியளித்த சாலைகள்..! – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கடும் பனிப்பொழிவால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மார்கழி மாதம் தொடங்கி சில நாட்களிலேயே ஆன நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த பனிப்பொழிவால் சாலைகள் புகை சூழ்ந்தது போல் காட்சி அளித்தது. இதனால், வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiPWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1zbm93ZmFsbC0xNTcxMzLSAUFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy9jaGVubmFpLXNub3dmYWxsLTE1NzEzMg?oc=5