சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ரயில் முன் பாய்ந்து … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உயர் நீதிமன்ற இளம்பெண் வழக்கறிஞர் ஹேமாவதி (26) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, மணலூரைச் சேர்ந்தவர் ஹேமாவதி. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

இதற்காக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே தனது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கியிருந்தார். தினமும் மின்சார ரயில் மூலம் பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஹேமாவதி பூங்கா ரயில் நிலையம் வந்தார். அங்குநின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில் முன் திடீரென பாய்ந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, எழும்பூர் ரயில்வே போலீஸார் நிகழ்விடம் விரைந்து ஹேமாவதி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கறிஞர் ஹேமாவதி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMia2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9jcmltZS85MTc5NTUtZmVtYWxlLWxhd3llci1jb21taXRzLXN1aWNpZGUtYnktanVtcGluZy1pbi1mcm9udC1vZi10cmFpbi5odG1s0gEA?oc=5