ஐஎஸ்எல் தொடரில் இன்று சென்னை – மும்பை மோதல் | Chennai-Mumbai clash in ISL football today … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.

சென்னையின் எப்சி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் மும்பை அணி 10 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 டிராவுடன் 24 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த சீசனில் சென்னையின் எப்சி தனது சொந்த மைதானத்தில் மும்பையிடம் 6-2 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது.

சென்னையின் எப்சி தனது கடைசி ஆட்டத்தை கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் மும்பை சிட்டி எப்சி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எப்சி அணியை தோற்கடித்து இருந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXGh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9zcG9ydHMvOTE4NTcwLWNoZW5uYWktbXVtYmFpLWNsYXNoLWluLWlzbC1mb290YmFsbC10b2RheS5odG1s0gEA?oc=5