ஜன.3, 4-இல் சென்னை – கோவை ரயில் சேவை ரத்து – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை – கோவை செல்லும் ரயில் சேவை பராமரிப்புப் பணி காரணமாக ஜன.3, 4 தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ‘கோவை விரைவு ரயில்’ (வண்டி எண்.12675) 2023, ஜன. 3, 4 தேதிகளிலும், காலை 7.10 மணிக்கு செல்லும் ‘சதாப்தி விரைவு ரயில்’ (வண்டி எண்.12243) ஜன.4-ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

மறுமாா்க்கமாக கோவையில் இருந்து சென்னை சென்னை சென்ட்ரலுக்கு மாலை 3.15 மணிக்கு செல்லும் ‘கோவை விரைவு ரயில்’ (வண்டி எண்.12676) 2023, ஜன. 3, 4 தேதிகளிலும், மாலை 3.05 மணிக்கு செல்லும் செல்லும் ‘சதாப்தி விரைவு ரயில்’ (வண்டி எண்.12244) ஜன.4-ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

சேலம்-அரக்கோணம்: சேலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில் டிச.26 , 27 மற்றும் ஜன.3, 4 தேதிகளில் காட்பாடி வரை இயக்கப்படும். காட்பாடி முதல் அரக்கோணம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக அரக்கோணத்திலிருந்து சேலத்துக்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் டிச.27, 28, ஜன.4, 5 தேதிகளில் காட்பாடியில் இருந்து புறப்படும். அரக்கோணம் முதல் காட்பாடி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதையில் இயக்கம்: உத்தர பிரதேசம் முதல் கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ராப்திசாகா் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்.12511) ஞாயிற்றுக்கிழமை (டிச.25) சென்னை சென்ட்ரல், எழும்பூா், விழுப்புரம், காட்பாடி வழியாக இயக்கப்படும்.

ஜாா்கண்ட் மாநிலம் தன்பாத் முதல் கேரள மாநிலம் ஆழப்புழா செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்.13351) ஞாயிற்றுக்கிழமை (டிச.25) சென்னை சென்ட்ரல், எழும்பூா், விழுப்புரம், காட்பாடி வழியாக இயக்கப்படும். மேலும், திருவள்ளூா், அரக்கோணம் ரயில் நிலையங்களில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMizAJodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzIzLyVFMCVBRSU5QyVFMCVBRSVBOTMtNC0lRTAlQUUlODclRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LS0tJUUwJUFFJTk1JUUwJUFGJThCJUUwJUFFJUI1JUUwJUFGJTg4LSVFMCVBRSVCMCVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlOUElRTAlQUYlODclRTAlQUUlQjUlRTAlQUYlODgtJUUwJUFFJUIwJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFGJTgxLTM5NzIwMTguaHRtbNIByQJodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIyL2RlYy8yMy8lRTAlQUUlOUMlRTAlQUUlQTkzLTQtJUUwJUFFJTg3JUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0tLSVFMCVBRSU5NSVFMCVBRiU4QiVFMCVBRSVCNSVFMCVBRiU4OC0lRTAlQUUlQjAlRTAlQUUlQUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTg3JUUwJUFFJUI1JUUwJUFGJTg4LSVFMCVBRSVCMCVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0zOTcyMDE4LmFtcA?oc=5