பெங்களூரு போலீசாரிடம் சென்னை போக்குவரத்து போலீஸ் குறித்து குறை தெரிவித்த நபர் – Polimer News

சென்னைச் செய்திகள்

சென்னையில் நடப்பாண்டில் விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் பொருத்திய ஒரு லட்சத்து 34 ஆயிரம் வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 கோடியே 21 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகன விதிமீறல் தொடர்பாக சென்னை போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பெங்களூரு காவல்துறை ட்விட்டர் பதிவுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் கருத்துக் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை போலீசார் வழக்கு விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiKGh0dHBzOi8vd3d3LnBvbGltZXJuZXdzLmNvbS9kbmV3cy8xOTQyOTDSAQA?oc=5