உடலுறவுக்காக மட்டும்தான் விடுதி அறைகளா? சர்ச்சை விளம்பரப் பலகை! – தினமணி

சென்னைச் செய்திகள்

விடுதி அறைகளுக்கு ஆபாச வார்த்தைகளில் விளம்பரம்

சென்னையில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை ஒன்று, உடலுறவுக்கு மட்டும்தான் விடுதி அறைகளா? என்று கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளது. 

வணிகமயமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால், அனைத்தையுமே வியாபார கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கால மாற்றத்துக்கு ஏற்ப விளம்பரங்கள் அமைப்பதில் / ஒளிபரப்புவதில் பல வகைகளை நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. 

அந்த வகையில், சாலைகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளும் பலவிதங்களில் தற்போது மாறியுள்ளன. அப்படி மாற்றம் காண்பது சமூகத்துக்கு நேர்மறையாக அமைந்தால், நல்லது. அதுவே பலரைக் காயப்படுத்தும் வகையிலோ அல்லது பலரைத் தவறாக வழிநடத்தும் வகையிலோ அமைந்தால், அது குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது நமது கடமையாக உள்ளது.

அப்படி முகம் சுழிக்க வைத்துள்ளது சென்னை சின்னமலை அண்ணா சாலையில் அமைந்துள்ள விளம்பரப் பலகை ஒன்று. சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகேவுள்ள தனியார் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை பெண்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

பெண்களை சரிநிகர் சமமாக நடத்தும் சூழல் சென்னை போன்ற சில நகரங்களுக்கு மட்டுமே பெருமளவு வாய்த்துள்ளது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்த சாலையில்தான் ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர்.

இத்தகைய சாலையில் பெண்களை தரக்குறைவாக சித்தரித்து அமைக்கப்படுள்ள விளம்பர பலகையை உடனடியாக அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMie2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9kZWMvMjQvYXJlLWhvdGVsLXJvb21zLWp1c3QtZm9yLXNleC1kaXNwdXRlLWFubm95aW5nLWRpZ2l0YWwtYWRkLWJvYXJkLTM5NzI2NDAuaHRtbNIBeGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzI0L2FyZS1ob3RlbC1yb29tcy1qdXN0LWZvci1zZXgtZGlzcHV0ZS1hbm5veWluZy1kaWdpdGFsLWFkZC1ib2FyZC0zOTcyNjQwLmFtcA?oc=5