’ரூ.1,000 வாடகையில் உல்லாசமாக இருக்கலாம்…’- ஆபாச விளம்பர பலகையால் சென்னையில் பரபரப்பு..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை சின்னமலை பகுதி சாலையில் இயங்கி வரும் ஹோட்டலின் ஆபாச விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்ட நிலையில், அதுதொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே அருகே இயங்கி வரும் ஹோட்டலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை விளம்பரத்தில் ரூ.1000-க்கு அறை வாடகைக்கு விடப்படும் எனவும், எந்த பெண்ணுடன் வேண்டுமானாலும் உல்லாசமாக இருக்கலாம் என்ற முகம் சுழிக்க வைக்கும் வாசகங்களுடன் மிகவும் ஆபாசமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

சென்னையின் பிரதான பகுதியான மவுண்ட் ரோடு சாலை அருகே இருந்த அந்த விளம்பரம் அவ்வழியே சென்று வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விளம்பரத்தை கவனித்தவர்களில்  சிலர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் ஷேர் செய்தனர். 

இந்த பதிவு ட்விட்டரில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும்  அந்த பதிவின் கீழ் பலர் கருத்து பதிவிட்டும், அந்த பதிவை பகிர்ந்தும் வந்தனர்.  பெண்களை தரக்குறைவாக சித்தரித்து அமைக்கப்படுள்ள விளம்பர பலகையை உடனடியாக அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தனியார் தங்கும் விடுதியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அறிவிப்பு பலகை உடனடியாக அகற்றப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட விடுதிக்குச் சென்ற போலீசார் விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஊழியர்கள் அல்லது வேறு  யாரோனும் திட்டமிட்டு நிர்வாகத்தை பழிவாங்குவதற்காக LED பலகையில் எழுதி இருப்பதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  அறிவிப்பு பலகை உடனடியாக அகற்றப்பட்டது. விசாரணையில் இலவச வைஃபை நெட்வொர்க்கில் ஹேக் செய்த அடையாளம் தெரியாத நபர்கள், இவ்வாறு செய்திருக்கலாம் என ஹோட்டல் நிர்வாகத்தினர் சந்தேகம் தெரிவித்தாகவும்  இதுபற்றிய தொழில்நுட்ப அறிவு உள்ள ஒருவரே இந்த முறைகேட்டை செய்திருக்கலாம் என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஹோட்டலில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ள சென்னை போலீசார், “திறந்த வைஃபை நெட்வொர்க்குகளை தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அவற்றைப் பாதுகாக்க வேண்டும். வைஃபை அல்லது வயர்டு இணைப்பு மூலம் விளம்பர பேனலுக்கான அணுகலை உடனடியாக மறுபரிசீலனை செய்து பாதுகாப்பதற்கு இதுபோன்ற அனைத்து பொது இடக் காட்சி பேனல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Published by:Lakshmanan G

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL2hvdGVsLXJvb21zLWp1c3QtZm9yLXNleC1kaXNwdXRlLWFubm95aW5nLWRpZ2l0YWwtYWRkLWJvYXJkLWluLWNoZW5uYWktbGl0dGxlLW1vdW50LW1ldHJvLXN0YXRpb24tbmVhci04NjE3MzEuaHRtbNIBnAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9ob3RlbC1yb29tcy1qdXN0LWZvci1zZXgtZGlzcHV0ZS1hbm5veWluZy1kaWdpdGFsLWFkZC1ib2FyZC1pbi1jaGVubmFpLWxpdHRsZS1tb3VudC1tZXRyby1zdGF0aW9uLW5lYXItODYxNzMxLmh0bWw?oc=5