சென்னை: எண்ணூர் கடலில் குளித்த 4 வடமாநில வாலிபர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயம்…! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை எண்ணூர் கடலில் குளிப்பதற்காக 4 வடமாநில வாலிபர்கள் இன்று சென்றுள்ளனர். இவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி தத்தளித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் கடல் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு எண்ணூர் தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். இவர்கள் கடலில் மூழ்கி மாயமான 4 வடமாநில வாலிபர்களையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

எண்ணூர் கடலில் குளித்த வடமாநில வாலிபர்கள் 4 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiggFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvY2hlbm5haS00LW5vcnRoLXN0YXRlLXlvdXRocy1nb3QtY2F1Z2h0LWluLWEtZ2lhbnQtd2F2ZS1hZnRlci1iYXRoaW5nLWluLWVubm9yZS1zZWEtODY1MTg40gGGAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvY2hlbm5haS00LW5vcnRoLXN0YXRlLXlvdXRocy1nb3QtY2F1Z2h0LWluLWEtZ2lhbnQtd2F2ZS1hZnRlci1iYXRoaW5nLWluLWVubm9yZS1zZWEtODY1MTg4?oc=5