சென்னை: `நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே!’ – கோடி கணக்கில் பிசினஸ் செய்த தொழிலதிபர் கதறல் – Vikatan

சென்னைச் செய்திகள்

இது குறித்து கூடுல் கமிஷனர் அன்புவிடம் பேசினோம்.  “என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்து இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோவிலும் பைக்கிலும்தான் இந்தக் கும்பல் வந்ததை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தோம். ஆட்டோவின் நம்பர் பிளேட்டுகள் தெரியாதபடி மஞ்சள் பூசி அதை மறைத்து வைத்திருந்தனர். இருப்பினும் ஆட்டோவின் மாடலைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினோம். அப்போதுதான் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி வேலு குறித்த தகவல் தெரியவந்தது. ஆனால் அதற்குள் வேலு தன்னுடைய கூட்டாளிகள் ஆறுபேருடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டார். இதையடுத்து சரணடைந்தவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தபோதுதான் புகார் கொடுத்த முகமது அப்துல்லாவுக்கு பிசினஸில் விஸ்வாசியாக இருந்த செய்யது முகமது சித்திக் என்பவர்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

அன்பு ஐபிஎஸ்

இதையடுத்து சித்திக்கைக் கைதுசெய்து விசாரித்தோம். அப்போது இந்தக் கும்பல், குதிரைப் பந்தயத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது தெரியவந்தது. கைதான வேலுவிடம், தன்னுடைய ஓனர் முகமது அப்துல்லாவிடம் எப்போதும் கோடிக்கணக்கில் பணம் இருக்கும். அதனால் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று கூறி அந்தப் பணத்தைக் கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என சித்திக், ஐடியா கொடுத்ததும் விசாரணையில் தெரிந்தது. அதன்படி ஆட்டோவில் வந்து பணத்தை வேலு தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றிருக்கிறது. கைதான விஜயகுமார், வேலு, ரவி ஆகியோர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களுடன் சென்னை பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், பழையவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவராஜ், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த புஷ்பராஜ், மண்ணடியைச் சேர்ந்த முகமது ஃபாசில், செய்யது முகமது சித்திக், தூத்துக்குடி காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல் ஜாஸ்மின் என 9 பேரை கைதுசெய்திருக்கிறோம். இந்தக் கும்பலிடமிருந்து இதுவரை 1,64,56,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் விசிக-வைச் சேர்ந்த ஒருவர் உட்பட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம்” என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLWEtZ2FuZy10aGF0LXByZXRlbmRlZC10by1iZS1uaWEtb2ZmaWNlcnMtYW5kLWxvb3RlZC1sdW1wc3VtLWFtb3VudNIBf2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2FtcC9zdG9yeS9uZXdzL2NyaW1lL3BvbGljZS1hcnJlc3RlZC1hLWdhbmctdGhhdC1wcmV0ZW5kZWQtdG8tYmUtbmlhLW9mZmljZXJzLWFuZC1sb290ZWQtbHVtcHN1bS1hbW91bnQ?oc=5