சென்னை முதல் குமரி வரை.. 10 ஆயிரம் பேரை இழுத்து சென்ற கடல் – அலைக்குள் புதைந்த சொல்லப்படாத கதைகள் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை தமிழகத்தின் நெய்தல் நிலங்கலை கொய்து போட்டது.

அகிலத்தையே அலற வைத்த சுனாமி பேரலை, ஆயிரக்கணக்கானவர்களை தனக்குள்ளே அழைத்துச்சென்று இன்றுடன் 18 வருடங்கள் ஆகிறது… ஆனால் இப்போது வரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள்.

சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடிச் சென்ற சுனாமியால் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

குறிப்பாக இயற்கை பேரிடர்களால் சபிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தான் சுனாமியாலும் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 54 கிலோமீட்டர் தொலைவிலான கடற்பரப்பு முழுவதுமாக சுருட்டி வீசப்பட்டதில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiPGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS10c3VuYW1pLTE1ODA1NdIBQGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vYW1wL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktdHN1bmFtaS0xNTgwNTU?oc=5