சென்னை, 21 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை உள்பட 22 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibGh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9kZWMvMjYvY2hhbmNlLW9mLXJhaW4tdGlsbC0xLXBtLWluLWNoZW5uYWktMjAtZGlzdHJpY3RzLTM5NzM1MTcuaHRtbNIBaWh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzI2L2NoYW5jZS1vZi1yYWluLXRpbGwtMS1wbS1pbi1jaGVubmFpLTIwLWRpc3RyaWN0cy0zOTczNTE3LmFtcA?oc=5