17 வயது மகனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது: சென்னை காவல்துறை அதிரடி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பைக் வீலிங் சாகசம் செய்த 17 வயது மாணவரும், அவரை வாகனம் ஓட்ட அனுமதித்த அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள தியாகராய நகரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த 17 வயது இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எழுபத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை கண்டறிந்தனர். அவர் மதுரவாயிலை சேர்ந்த 17 வயதான பொறியியல் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட மாணவரையும், 18 வயது நிரம்பாத அவரை வாகனம் ஓட்ட அனுமதித்தற்கு மாணவரின் தந்தையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வாகனத்தை ஓட்டிய மாணவருக்கு 17 வயது என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், அவரது தந்தையை சிறையில் இடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2Jpa2Utd2hlZWxpbmctaW4tY2hlbm5haS0xNy15ZWFycy1vbGQtMjZ0aC1kZWNlbWJlci01NjU0NjUv0gFqaHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUvYmlrZS13aGVlbGluZy1pbi1jaGVubmFpLTE3LXllYXJzLW9sZC0yNnRoLWRlY2VtYmVyLTU2NTQ2NS9saXRlLw?oc=5