புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பகுதி-6, 8க்குட்பட்ட  புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னைக் குடிநீர் வாரியத்தின் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று பகுதி- 6 மற்றும் 8 க்குட்பட்ட  புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது.

இந்த பராமரிப்பு பணி நடைபெறும் போது மேற்கண்ட பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் கழிவுநீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே, பகுதி 6, 8 வசிக்கும் பொது மக்கள், கழிவுநீர் சம்மந்தப்பட்ட புகார்களை பகுதி பொறியாளர் (6) 8144930906, துணைபகுதி பொறியாளர் (மின்)-6 8144930256, பகுதி பொறியாளர் (8) 8144930908, துணை பகுதி பொறியாளர்(மின்)-8, 8144930258 என்ற தொலைப்பேசி மற்றும் செல்போன் எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYwOTLSAQA?oc=5