தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை:

latest tamil news

குமரிக் கடல் பகுதியில் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று காலை நிலவரப்படி, தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பு படிப்படியாக குறைய துவங்கி உள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் நகர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 31 மற்றும் புத்தாண்டு தினமான ஜன., 1 ஆகிய நாட்களில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான சேவையில் தாமதம்

சென்னையில் நேற்று அதிகாலை பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில், சில நாட்களாக, அதிகாலையில் அதிக பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் நேற்று, பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ‘ஆகாசா’ விமானம்; கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து வந்த ‘கத்தார்’ விமானம் ஆகியவை, பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.இதேபோல, கோவை மற்றும் மும்பையில் இருந்து வந்த ‘இண்டிகோ’ விமானங்கள், கோவைக்கு திருப்பி விடப்பட்டன. கோல்கட்டா, ராஜமுந்திரி, புனே உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, நேற்று காலை வர வேண்டிய விமானங்கள், ஒரு மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை தாமதமாக சென்னை வந்தன.சிங்கப்பூரில் இருந்து காலை, 9:50 மணிக்கு வர வேண்டிய, ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானம், மாலை, 4:00 மணிக்கு சென்னை வந்தது. பிற்பகல், 1:55 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானம், மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு சென்றது.மேலும், கோல்கட்டா, பெங்களூரு உட்பட, பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper

டிச.29: இன்று 222வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை


டிச.29: இன்று 222வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

முந்தய

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது அமெரிக்காவில் தொடரும் பனி சூறாவளி


நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது அமெரிக்காவில் தொடரும் பனி சூறாவளி

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMDU3MTLSAQA?oc=5