புத்தாண்டு 2023: சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு.. மீறினால் நடவடிக்கை மக்களே! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் அதிகரித்து வரும் BF 7 புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதையடுத்து அதிகரிக்க தொடங்கும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாஸ்க் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்க, மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து மதுரை வந்த சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார் ஓட்டல் மேலாண்மையினர் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை நட்சத்திர விடுதியில் 80% நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்வையும் நடத்த கூடாது.

மதுபோதையில் இயக்கப்படும் வாகனங்களில் காவல்துறை தரும் QR code-ஐ ஒட்ட வேண்டும். ஏதும் ஆபத்து ஏற்பட்டால் QR code-ஐ பயன்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம்.

பெண்களுக்கு பாதிப்பின்றி நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களை நடத்த வேண்டும்.

புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர விடுதிகள் இயங்க அனுமதியில்லை.

நீச்சல் குளத்திற்கு அனுமதி கிடையாது; அதிகமான மது போதையில் இருக்கும் நபர்கள் அனுமதிக்க கூடாது.

சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர வீடுதிகளிலும் இரவு நேரங்களில் காவல்துறையினில் வாகனம் சோதனை ஈடுபடுவார்கள்.

அதிகம் மது போதையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ரோந்து பணியில் இருக்கும் காவல்துறையிடம் தெரிவிக்கலாம்.

First published:

Tags: Chennai, Chennai Police, Corona safety, CoronaVirus

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL3RhbWlsLW5hZHUvY29yb25hLXJlc3RyaWN0aW9ucy1mb3ItbmV3LXllYXItMjAyMy1pbi1jaGVubmFpLTg2Mzk2Mi5odG1s0gFpaHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL3RhbWlsLW5hZHUvY29yb25hLXJlc3RyaWN0aW9ucy1mb3ItbmV3LXllYXItMjAyMy1pbi1jaGVubmFpLTg2Mzk2Mi5odG1s?oc=5