‘சொத்துவரி செலுத்த கால அவகாசம்’.. சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

டிசம்பர் மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் கூடியது. அதில் சொத்துவரி செலுத்த கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் உரையாற்றிய மேயர் பிரியா, “உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியையும், மாமன்றம் சார்பாக புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை மற்றும் குடிநீர் குழாய்கள், மின் துறைகளின் மின் கம்பங்கள் மற்றும் மின் பகிர்மான பெட்டிகள், மின்மாற்றிக்ள் போன்றவை இடமாற்றம் செய்யும் பணிகளால் தாமதமான  நிலையில் பணிகளை முடிக்க 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இன்றைய மாநகராட்சி கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:

சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் 2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு.

பணிகள் துறைக்கு நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் மற்றும் கட்டணங்கள் மாற்றம்.

மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்க தீர்மானம்.

கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு.

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி.

சென்னை மாநகராட்சியில், 1.77 லட்சம் தெரு விளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகள் இயக்குவதற்கும் பராமரிக்கவும் ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி.

கொசஸ்தலை ஆற்றில் கட்டமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையாத காரணத்தினால் அதன் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அனுமதி.

பெருங்குடி குப்பை கிடங்கை பையோ மைனிங் முறையில் சுத்தப்படுதும் போது சுற்றுச்சூழல் பூங்கா, சிஎன்ஜி பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப தயார்படுத்த அனுமதி.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiwFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL3Byb3BlcnR5LXRheC1zZXR0bGVtZW50LWRlYWRsaW5lLWV4dGVuZGVkLXRpbGwtamFudWFyeS0xNS1jaGVubmFpLWNvcnBvcmF0aW9uLWRlY2xhcmF0aW9uLTg2MzQyMS5odG1s0gGPAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL3Byb3BlcnR5LXRheC1zZXR0bGVtZW50LWRlYWRsaW5lLWV4dGVuZGVkLXRpbGwtamFudWFyeS0xNS1jaGVubmFpLWNvcnBvcmF0aW9uLWRlY2xhcmF0aW9uLTg2MzQyMS5odG1s?oc=5