புத்தாண்டு: ஊருக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப 600 சிறப்புப் பேருந்துகள்! – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப் படம்

ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழு முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கில புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஜனவரி 1ஆம் தேதி வரை நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோவை, ஈரோடு, சேலம், திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கப்படும் பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZmh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9kZWMvMjkvNjAwLXNwZWNpYWwtYnVzZXMtdG8tNy1jaXRpZXMtZm9yLW5ldy15ZWFyLTM5NzUzNzMuaHRtbNIBY2h0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzI5LzYwMC1zcGVjaWFsLWJ1c2VzLXRvLTctY2l0aWVzLWZvci1uZXcteWVhci0zOTc1MzczLmFtcA?oc=5