கேரளாவில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் பகல் நேர ரெயில்களில் தூங்கும் வசதி டிக்கெட் வழங்குவது… – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இதற்கான டிக்கெட் வாங்கும் பயணிகள் அதற்கான பெட்டியில் பயணம் செய்யும் போது தனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் இரவில் படுத்து கொள்ளலாம்.

தற்போது பகல் நேர ரெயில்களில் இதுபோன்ற டிக்கெட் எடுக்கும் பயணிகள் சிலர் பகலிலும் சீட்களில் அமராமல் படுத்து கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இதனால் முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்கும் தூங்கும் வசதியில் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம், பிரச்சினைகள் ஏற்பட்டது.

இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. எனவே இதனை தடுக்க ரெயில்வே அதிகாரிகள் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்து வந்தனர்.

அதன்படி பகல் நேர ரெயில்களில் இனி தூங்கும் வசதி டிக்கெட்டை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை தற்போது திருவனந்தபுரம் கோட்ட ரெயில்களில் அறிமுகப்படுத்த பட உள்ளது.

அதன்படி பரீட்ச்சார்த்த முறையில் இந்த திட்டம் தென்னக ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது கேரளாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை மங்களூர்-சென்னை மெயில், மலபார் மங்களூர்-சென்னை-மங்களூர்,

திருவனந்தபுரம்-சென்னை, கன்னியாகுமரி-பெங்களூரு உள்ளிட்ட ரெயில்களில் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி பகல் நேர ரெயில்களில் அமர்ந்து வருவோருக்கு ஏற்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiugFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vbmV3cy9uYXRpb25hbC90YW1pbC1uZXdzLXN0b3Atb2ZmZXJpbmctc2xlZXBlci10aWNrZXRzLW9uLWRheXRpbWUtdHJhaW5zLWZyb20ta2VyYWxhLXRvLWNoZW5uYWktYW5kLWJlbmdhbHVydS1pbnRyb2R1Y2VkLWluLXRoaXJ1dmFuYW50aGFwdXJhbS1kaXZpc2lvbi01NTUzNDbSAb4BaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL25hdGlvbmFsL3RhbWlsLW5ld3Mtc3RvcC1vZmZlcmluZy1zbGVlcGVyLXRpY2tldHMtb24tZGF5dGltZS10cmFpbnMtZnJvbS1rZXJhbGEtdG8tY2hlbm5haS1hbmQtYmVuZ2FsdXJ1LWludHJvZHVjZWQtaW4tdGhpcnV2YW5hbnRoYXB1cmFtLWRpdmlzaW9uLTU1NTM0Ng?oc=5