சென்னை: முதலில் பாசம்; அடுத்து கைவரிசை – வேலை செய்யும் வீட்டில் திருடிய பெண் சிக்கியது எப்படி?! – Vikatan

சென்னைச் செய்திகள்

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டிலிருக்கும் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுசேரியில் உள்ள குடியிருப்பில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மாமியார் ராஜலட்சுமி (62). இவருக்கு உதவி செய்ய பெண் கவனிப்பாளரை திருமூர்த்தி தேடிவந்தார். அப்போது சென்னை முகப்பேரில் உள்ள ஏஜென்ட் ஒருவர் மூலம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் 24 மணி நேரமும் ராஜலட்சுமியை கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமூர்த்தி தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஆந்திராவுக்குச் சென்றார். அப்போது சிறுசேரி வீட்டில் ராஜலட்சுமியும் விஜயலட்சுமியும் இருந்தனர்.

தங்க நகைகள்

இந்தநிலையில் ஊருக்குச் சென்று விட்டு திருமூர்த்தி குடும்பத்தினருடன் வீடு திரும்பிய போது ராஜலட்சுமி சுயநினைவில்லாமல் இருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்து ராஜலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைக் கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்ட விஜயலட்சுமி மாயமாகியிருந்தார். இதையடுத்து வீட்டில் உள்ள தங்க நகைகளை திருமூர்த்தி சரிபார்த்தபோது எட்டு சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தன. அதனால் தாழம்பூர் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். அதன்பேரில் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் சுதர்சனம், காசிமுருகன், சம்பத், காவலர்கள் மாரிமுத்து, மலர்விழி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரித்து கொள்ளைச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் விஜயலட்சுமியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvbGFkeS1hcnJlc3RlZC1pbi10aGVmdC1jYXNlLWJ5LXBvbGljZS1pbi0yNC1ob3Vycy1pbi1jaGVubmFp0gFpaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvbGFkeS1hcnJlc3RlZC1pbi10aGVmdC1jYXNlLWJ5LXBvbGljZS1pbi0yNC1ob3Vycy1pbi1jaGVubmFp?oc=5