பட்டிவீரன்பட்டியில் மாயமான 2 மாணவிகள் சென்னையில் மீட்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டியில், தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த 2 மாணவிகள், கடந்த 22-ந்தேதி தங்களது வீட்டில் டியூசன் வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அதன்பிறகு 2 மாணவிகளும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர், பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தல் புகார் அளித்தனர். அதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வந்தனர். மேலும் மாணவிகள் மாயமான தகவல் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் வைரலானது.

இந்தநிலையில் 2 மாணவிகளும் சென்னை சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் 2 பேரும் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது அந்த ஜவுளிக்கடையின் உரிமையாளர், எதார்த்தமாக சமூக வலைத்தளங்களை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கடையில் பணியாற்றி வந்த மாணவிகளின் புகைப்படத்தை அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்னை சென்று, 2 மாணவிகளையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiRmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS8yLWdpcmwtc3R1ZGVudC1yZWNvdmVyeS04Njg4MDDSAUpodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlLzItZ2lybC1zdHVkZW50LXJlY292ZXJ5LTg2ODgwMA?oc=5