குப்பை இல்லாத சென்னை ஆட்சேபனை, ஆலோசனை பொதுமக்கள் தெரிவிக்கலாம்: மாநகராட்சி … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சியினை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகராமாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் அறிவிக்க பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிய  அரசின்  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியினை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற (Open Defecation Free++)நகரமாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் (Garbage Free City 3 Star) அறிவிக்க பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற (ODF++) நகரமாக அறிவிப்பு செய்தல் தொடர்பாக,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளும் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற வார்டுகளாக சான்று பெறுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மேலும்,  சென்னை மாநகராட்சியை குப்பை இல்லா மாநகராட்சியாக (Garbage Free City 3 Star) அறிவிப்பு செய்தல் தொடர்பாக, 200 வார்டுகளும் குப்பை இல்லா வார்டுகளாக சான்று பெறுவதற்கான  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எனவே, இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை இருந்தால்,  சென்னை மாநகராட்சிக்கு [email protected] <mailto:[email protected]> என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை,  சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்ற முகவரியில் கடிதம் மூலமும் தெரிவிக்கலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjcwMTjSAQA?oc=5