இடைநிலை ஆசிரியர்கள் சம ஊதிய விவகாரம் – முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கியத் தகவல்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் – செலவினம் அவர்களின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இது தொடர்பாக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சம ஊதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு குறித்த அரசின் அறிவிப்பை ஆராய வேண்டியுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போராடியும் எங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை; இதுவரை 3 குழுக்களை சந்தித்துள்ளோம்; எந்த குழுவிலும் தீர்வு எட்டப்படவில்லை. சம ஊதியம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் சரியான முடிவு எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL2NvbW1pdHRlZS10by1iZS1mb3JtZWQtdG8tc2Vlay1zb2x1dGlvbi1vbi1kaXNwYXJpdHktaW4tbWlkZGxlLXNjaG9vbC10ZWFjaGVycy1wYXktODY1Njk3Lmh0bWzSAYgBaHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2NoZW5uYWkvY29tbWl0dGVlLXRvLWJlLWZvcm1lZC10by1zZWVrLXNvbHV0aW9uLW9uLWRpc3Bhcml0eS1pbi1taWRkbGUtc2Nob29sLXRlYWNoZXJzLXBheS04NjU2OTcuaHRtbA?oc=5