சந்தோஷ் நாராயணன் இசை.. உணவுத்திருவிழா.. மீண்டும் வருகிறது ‘சென்னை சங்கமம்’.. எப்போது? எங்கே? முழு விவரம்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தைப்பொங்கலை ஒட்டி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒருங்கிணைப்பில் மீண்டும் ‘சென்னை சங்கமம்’ என்கிற ‘நம்ம ஊரு திருவிழா’ கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னை சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ‘சென்னை சங்கமம்’, ‘நம்ம ஊரு திருவிழா’ குறித்து சென்னை சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கலை பண்பாட்டுத்துறை சார்பில் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி ‘நம்ம ஊரு திருவிழா’வாக இந்தாண்டு மிக சிறப்பாக சென்னயில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் நிலப்பரப்பு முழுவதும் நாட்டுப்புற கலை வடிவங்களை அடையாளப்படுத்தும் விதமாக ஜனவரி முழுவது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதத்தில் ஏறுதழுவல், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி, பொங்கல் திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் மிக முக்கியமாக ஜனவரி 13 முதல் 17ம் தேதி வரை ‘சென்னை சங்கமம்’, ‘நம்ம ஊரு திருவிழா’ நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது.சென்னை தவிர மதுரை, திருச்சி, கோவை, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 நகரங்களில் “நம்ம ஊரு திருவிழா” கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கலை நிகழ்ச்சியை ஜனவரி 13ம் தேதி தீவுத்திடலில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சென்னை முழுவதும் 16 இடங்களில் மாலை நேரத்தில் “சென்னை சங்கமம்”, ” நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து உணவு திருவிழாவும் நடைபெறும். இதில் இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளர். ஒட்டுமொத்தமாக 805 குழுக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

சென்னை சங்கமம் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதே உணர்வோடு தனது அண்ணனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பின் பல கலைஞர்களுக்கு உலகம் முழுவதும் சென்று நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு இருந்தது. தற்போதும் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிகழ்ச்சியின் போது மாட்டிறைச்சி இடம்பெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உணவு என்பது அவரவர் விருப்பம் அதனை சர்ச்சையாக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy90YW1pbC1uYWR1L2NoZW5uYWktc2FuZ2FtYW0tMjAyMy1uYW1tYS1vb3J1LXRoaXJ1dml6aGEtaW4tNy1kaXN0cmljdHMta2FuaW1vemhpLWFubm91bmNlcy1kYXRlLTg2NTY2MC5odG1s0gGMAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy90YW1pbC1uYWR1L2NoZW5uYWktc2FuZ2FtYW0tMjAyMy1uYW1tYS1vb3J1LXRoaXJ1dml6aGEtaW4tNy1kaXN0cmljdHMta2FuaW1vemhpLWFubm91bmNlcy1kYXRlLTg2NTY2MC5odG1s?oc=5