ஆங்கில புத்தாண்டையொட்டி பயணிகள் வசதிக்காக சென்னை- டெல்லி இடையே புதிதாக 4 விமான சேவைகள் துவங்கப்பட்டது – தினகரன்

சென்னைச் செய்திகள்

மீனம்பாக்கம்: சென்னை, டெல்லி இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம் புத்தாண்டு பரிசாக நேற்றுமுதல் 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை-டெல்லி மற்றும் சென்னை இடையே  தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.50  மணிக்கும் மாலை 3.40 மணிக்கும் இரண்டு விமானங்கள் சென்னை-டெல்லி இடையே புதிதாக இயக்கப்படுகின்றன. இதுபோல் டெல்லி-சென்னை இடையே பிற்பகல் 2.45 மணி மற்றும் இரவு 10.35 மணி ஆகிய நேரங்களில் இரண்டு புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் இருந்து டெல்லி சென்றுவரும் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் புத்தாண்டு பரிசாக ஒரே நாளில் 4 புதிய விமான சேவைகளை நேற்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது.இதன்படி சென்னை-டெல்லி-சென்னை இடையே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஏற்கனவே சென்னை-டெல்லி இடையே 19 விமான சேவைகளும் டெல்லி-சென்னை இடையே 19 விமான சேவைகள் என மொத்தம் 38விமான சேவைகள் இயங்கிக் கொண்டு இருந்தன. ஆனால் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பயணிகளின் நலன் கருதி ஏர் இந்தியா விமான நிறுவனம் மேலும் 4 விமான சேவைகளை புதிதாக தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை-டெல்லி-சென்னை இடையே தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjc5MjHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzkyMS9hbXA?oc=5