சென்னை கலங்கரை விளக்கம் – பெசன்ட் நகர் இடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைக்க ஆய்வு..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் – பெசன்ட் நகர் இடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை ரோப்கார் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது. புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjc3OTHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzc5MS9hbXA?oc=5