சோகத்தில் முடிந்த சுற்றலா.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 41). இவருக்கு திருமணமாகி வச்சலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.. இருவரும்  சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் .இந்தநிலையில் விஜய ராகவனின் தாயார் வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு(வயது5), அதீர்த் (வயது-10) ஆகிய ஐந்து பேரும் கடந்த 28-ஆம் தேதி அன்று  காரில் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று உள்ளனர்.

சுற்றுலா பயணத்தை முடித்து விட்டு விஜயராகவன் தனது   காரில் குடும்பத்தினருடன்  சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் கடலூர் மாவட்டம்  வேப்பூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் பெரிய நெசலூர் அருகே அய்யனார் பாளையம் என்ற இடத்தில் சாலை ஓரமாக காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி, காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில்  கார் முற்றிலுமாக உருக்குலைந்து நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீஸார்  காரின் சிதைந்த பாகங்களை அப்புறப்படுத்தி காரில் இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இந்த கோர சம்பவத்தில் காரை ஓட்டி வந்த விஜயராகவன், அவரது  குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார்  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: அசோக் குமார் (சென்னை)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvY2hlbm5haS1pdC1lbXBsb3llZS1mYW1pbHkta2lsbGVkLWluLXJvYWQtYWNjaWRlbnQtbmVhci12ZXBwdXItODY2OTA0Lmh0bWzSAXRodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9jaGVubmFpLWl0LWVtcGxveWVlLWZhbWlseS1raWxsZWQtaW4tcm9hZC1hY2NpZGVudC1uZWFyLXZlcHB1ci04NjY5MDQuaHRtbA?oc=5