மகள் உத்தாராவுடன் உன்னிகிருஷ்ணன் கச்சேரி: சென்னையில் இந்த வாரம் இத்தனை விசேஷம் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை இந்த வாரம் மெழுகுவர்த்தி செய்யும் பட்டறை, கிளாசிக்கல் கச்சேரிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மக்களுக்காக நடைபெற இருக்கிறது. முழு பட்டியலையும் இங்கே காணலாம்:

கிளாசிக்கல் இசைக் கச்சேரி

கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் பின்னணிப் பாடகர் பி.உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகளும் பாடகியுமான உத்தாரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கும் கிளாசிக்கல் கச்சேரி இந்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளது. ஜனவரி 7ஆம் தேதி, சனிக்கிழமை பாரத் கலாச்சரில் மாலை 4 மணி முதல் இசை நிகழ்ச்சியை கண்டு மகிழலாம்.

கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் ஜனவரி 8ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தி.நகரில் உள்ள பாரத் கலாச்சார் அரங்கில் தனது இசை கச்சேரியை நடத்துகிறார். இந்நிகழ்ச்சி இரவு 7.15 மணி முதல் நேரலையில் இருக்கும்.

ஜோர்டு இண்டியன்

இந்த வாரம் ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில், ஸ்கெட்ச் காமெடி மற்றும் மியூசிக் கலைஞர்களான ஜோர்டிண்டியன் நேரலையில் பங்கேற்கவுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 7, சனிக்கிழமை நேரலையில் கண்டு மகிழலாம்.

சுதா பஜார்

இந்த வாரம் சென்னை மக்களுக்காக பயணம் தொடர்பான கண்காட்சி திறக்கப்படுகிறது. கண்காட்சியானது இந்தியாவின் வளமான கைவினைப் பாரம்பரியத்தை அனைவரும் அணுகக்கூடிய வகையில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் புடவைகள், ஆண்களுக்கான ஆடைகள், வீட்டு அலங்காரங்கள் மற்றும் பலவற்றைப் காணலாம். பெங்களூரு, கொச்சி, புனே, கொல்கத்தா போன்ற பல்வேறு நகரங்களில் சூதா பஜார் அமைத்ததாக கூறப்படுகிறது. சென்னையில் ஜனவரி 4 முதல் 6 வரை (புதன் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமேதிஸ்டில் பஜார் திறந்திருக்கும்.

ஸ்டாண்ட்-அப் காமெடி

‘ஒர்க்கிங் இட் அவுட்’ என்பது நகைச்சுவை நடிகர்களான பரத் பாலாஜி மற்றும் ரபீந்தர் கண்ணன் ஆகியோரைக் கொண்ட ஒரு ஆங்கில ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியாகும். ஜனவரி 7, சனிக்கிழமையன்று அடையாறில் உள்ள ‘பாக்கியார்ட்’இல் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

டெத் பை லாப்டர்

‘டெத் பை லாப்டர்’ என்பது நகைச்சுவை நடிகர் விவேக் முரளிதரன் பங்கேற்கும் ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அவரது ஸ்டாண்ட்-அப் சிறப்பு ‘இந்தியா ஜூஸ்’க்குப் பிறகு வருகிறது. இந்த வாரம் ஜனவரி 8, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணி முதல், ‘பாக்கியார்ட்’இல் கண்டு மகிழலாம்.

மெழுகுவர்த்திகளை உருவாக்குவோம்

தேங்காய் மெழுகு, கப் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு நச்சு இல்லாத மெழுகுவர்த்திகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை சமிஹா ஐயருடன் இந்த பட்டறையில் கற்பிக்க உள்ளார். ஜனவரி 7, சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை அடையாறில் உள்ள ‘பாக்கியார்ட்’இல் பயிலரங்கம் நடக்கிறது. அனைத்து பொருட்களும் சேர்த்து ரூ.1,250 நுழைவு கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifGh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vZW50ZXJ0YWlubWVudC9jaGVubmFpLXRoaXMtd2Vlay1oYW5kaWNyYWZ0cy1tdXNpYy1jb25jZXJ0cy1zdGFuZHVwLWNvbWVkaWVzLTAzcmQtamFuLTU3MDEyMi_SAYEBaHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS9lbnRlcnRhaW5tZW50L2NoZW5uYWktdGhpcy13ZWVrLWhhbmRpY3JhZnRzLW11c2ljLWNvbmNlcnRzLXN0YW5kdXAtY29tZWRpZXMtMDNyZC1qYW4tNTcwMTIyL2xpdGUv?oc=5