சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணம்! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015 ஜூன் 29ல் தொடங்கியது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தற்போது நாள் ஒன்றுக்கு 2.20 லட்சம் பேர் பயணித்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், ‘கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் 3.56 கோடி பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர். 

2015 முதல் 2018 வரை 2,80,52,357 பயணிகளும் 2019ல் 3,28,13,628, 2020 ஆம் ஆண்டு 1,18,56,982 மற்றும் 2021 ஆம் ஆண்டு 2,53,03,383 பயணிகளும் பயணம் செய்துளளனர். 

2015 முதல் 2022 வரை 15,88,08,208 பேர் பயணம் செய்துள்ளனர்’ என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiT2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDIvY2hlbm5haS1tZXRyby10cmFpbi0zOTc3MzcwLmh0bWzSAUxodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIzL2phbi8wMi9jaGVubmFpLW1ldHJvLXRyYWluLTM5NzczNzAuYW1w?oc=5