ஊடகங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் பணி குறித்து அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. நிதானமற்ற போக்கு, கட்சியின் தலைவருக்கு அழகல்ல; இந்த மோசமான அணுகுமுறை, மிரட்டல் போக்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjgxNDbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODE0Ni9hbXA?oc=5