குப்பைகள் அற்ற நகரமா சென்னை… மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனசாட்சி இருக்கிறதா? – Vikatan

சென்னைச் செய்திகள்

சுகாதாரக் கேடு…

இந்தப் பிரச்னையின் இன்னொரு பார்வை குறித்தும் பேசிய அவர்கள், “சென்னை மாநகராட்சி பொதுவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் அற்ற நகரம் என்ற முடிவுக்கு எந்த அடிப்படையில் வந்தார்கள் அதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மனிதர்கள் பொதுவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தால்தான் சுகாதாரக்கேடா? செல்லப்பிராணிகள் வளர்க்கிறார்களே அவற்றில் பெரும்பாலோனோர் தங்கள் பிராணிகளை மலம் சிறுநீர் கழிக்க பொது இடங்களுக்குத்தான் அழைத்து வருகின்றனர். அது சுகாதாரக் கேடாக மாறாதா?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

சேத்துப்பட்டு பகுதியில்…

சுத்தம் என்றால் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். பேருக்காக அறிவித்துவிட்டு பெருமை தேட நினைப்பது எந்த வகையிலும் பயன்தராது. மக்களிடம் கருத்துக் கேட்பதற்கு முன்பு 200 வார்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் சுற்றிப் பார்க்க வேண்டும்!

உங்கள் பகுதியின் நிலையை [email protected] என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ அல்லது மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, பெருநகர மாநகராட்சி சென்னை- 600 003 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ தெரிவிப்பதுடன் கமென்டிலும் சொல்லுங்கள் சென்னை வாசிகளே…

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvaXMtY2hlbm5haS1hLWdhcmJhZ2UtZnJlZS1jaXR5LWRvLXRoZS1jb3Jwb3JhdGlvbi1vZmZpY2Vycy1oYXZlLWEtY29uc2NpZW5jZdIBc2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2FtcC9zdG9yeS9uZXdzL2lzLWNoZW5uYWktYS1nYXJiYWdlLWZyZWUtY2l0eS1kby10aGUtY29ycG9yYXRpb24tb2ZmaWNlcnMtaGF2ZS1hLWNvbnNjaWVuY2U?oc=5